வருகிற 22ம் தேதி முதல்வர் பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை :
தமிழக சட்டசபை தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்நிலையில், வருகின்ற 22-ம் தேதி தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக டெல்லிக்கு நேற்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று, அவரை சந்தித்து பேசினார். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.




