தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை :
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 2 மாதங்களில் வர உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் நிலவரம் குறித்த ஆலோசனையில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்கேற்று கடந்த வாரம் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக, நகர, பேரூராட்சிகள், மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்தும் பட்டியல் தனித்தனியாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
Read more – உதயசூரியன் சின்னத்திற்கான உலக சாதனை அங்கீகாரம் : சான்றிதழை பெற்று கொண்ட ஸ்டாலின்
இந்தநிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 10 ம் தேதிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.




