அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னை :
அதிமுக- த.மா.க கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தமாகா அதிமுகவிடம் வழங்கியது. பின்னர் அதிமுக மறுத்த நிலையில் 7 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் எனவும் தமாகா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Read more – காங்கிரஸ் உறுப்பினர்களை திமுக நடத்தும் விதம்… வேதனையில் கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி…
இந்தநிலையில், பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் பா.ம.கவிற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.கவிற்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.