இரண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்து 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் திருச்சி பிரச்சாரத்தில் அக்கட்சி வேட்பாளர் முருகானந்திற்கு அதர்வா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது; மக்களை ஏமாற்றி ஆட்சி செய்தவர்களுக்கு மரியாதையை கொடுக்கக்கூடாது. விரட்டியடிப்போம். இதுவரை தமிழகம் என்னை 4 வயது குழந்தையாய் இருந்து தற்போது எனக்கு 66 வயதாகி விட்டது. இன்னும் தமிழகம் எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே இருக்கிறது.
Read more – இன்றைய ராசிபலன் 23.03.2021!!
நான் பார்த்த இரண்டு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்து 7 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளது. சில நல்ல தலைவர்கள் ஆட்சி செய்த போதிலும் நல்லது என்பது சில மட்டுமே நடந்துள்ளது. ஆகையால் ஊழலுக்கு மாற்று மற்றொரு ஊழல் கட்சி இல்ல எனவே அவற்றை தூக்கி போட்டு மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆர் ஒரு கழகத்திற்கும் மட்டும் தலைவர் அல்ல.. அவர் அனைவரின் சொத்து என்றும் தெரிவித்துள்ளார்.