நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
திருச்சியில் விடியலின் முழக்கம் என்ற பெயரில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தரமான குடிநீர், கல்வி உள்ளிட்ட 7 உறுதிமொழிகளை அளித்தார்.அதிலும் குறிப்பாக கு தி.மு.க ஆட்சியில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மு,க ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ஸ்டாலின் என்னுடைய திட்டத்தை காப்பி அடித்துவிட்டார். இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று கூறியது ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் அளித்த வாக்குறுதிகள் ஆகும்.
Read more – திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள்…. இறுதியான ஒப்பந்தம்..
மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கை காகிதங்கள் பறந்து சென்று துண்டு சீட்டாக மாறி திமுக தலைவர் ஸ்டாலிடம் செல்கிறது. அதை அவர் அப்படியே படித்து விடுகிறார். என்றார். மேலும், ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல் பேசுகிறார். நாமே தீர்வு என்றால் அவர், ஒன்றிணைவோம் வா என்கிறார் என்று தெரிவித்துள்ளார்.