ஒரு சிலிண்டர் விலை 5000 ரூபாய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
திண்டுக்கல் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திண்டுக்கல்லில் பிரச்சார வாகனத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டபோது சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.
அதில், ஒரு சிலிண்டர் எவ்வளவு விலை என்பது உங்களுக்குத் தெரியும். 4,800 ரூபாய், ஏறத்தாழ ஐயாயிரம் ரூபாய். 6 சிலிண்டர்கள் ஒரு வருடத்திற்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அருமையான திட்டத்தைப் பொது மக்களுக்கு அம்மா அரசு வழங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் ஒரு சிலிண்டரின் விலை 835 ரூபாய் என்ற கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read more – தமிழகம் வெற்றிநடை எங்கே போடுகிறது… கடனில் தத்தளிக்கிறது.. அதிமுகவை கலாய்த்த டிடிவி
தொடர்ந்து இதுபோல் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய முறையில் பேசிவருவது நாம் அறிந்ததே. ஏற்கனவே இவர் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வாஜ்பாய் அறிவித்துள்ளார். மிகவும் அருமையான பட்ஜெட். மோடிக்கு பதிலாக வாஜ்பாய் என்று பேசியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.