பெண்களை தொடர்ந்து இழிவாக பேசினால் திமுகவினரின் நாக்கு சொந்தமாக இருக்காது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருமங்கலம் :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தநிலையில், முதல்வர் பழனிசாமியின் தாயார் பற்றி திமுக எம்.பி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
Read more – திமுகவிற்கு ஆதரவாக காடுவெட்டி மகள் பிரச்சாரம்… பரப்புரை வாகனத்தை மறித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்..
இதுகுறித்து, அதிமுக சார்பில் மதுரை திருமங்கல சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது; திமுகவினருக்கு உண்மையாக தைரியம் இருந்தால் நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேளுங்கள். செய்யப்போகும் திட்டங்களை கூறி வாக்கு சேகரியுங்கள். அதை விட்டுவிட்டு பெண்களை இழிவாக பேசியும், இல்லாததையும் பேசினால் திமுகவினர் நாக்கு சொந்தமாய் இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.