முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக ஓபிஎஸ் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் அதிமுக கட்சி முதல் எதிர் கட்சி திமுக வரை பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று ஆரணியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது : இந்தியாவிலேயே எந்த முதல்வரும், ஆய்வு பணிகளுக்காக மாவட்டம்தோறும் செல்கிறாரா? நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே என்று தெரிவித்தார்.
மேலும், எல்லா ஆட்சியிலும் குற்றச்சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். விரோதத்திலும், குரோதத்திலும் குற்றங்கள் நடைபெறும். இதை எந்த ஆட்சியிலும் தடுக்க முடியாது. சர்வாதிகார ஆட்சி நடந்தாலும் சரி, ஹிட்லர் ஆட்சி நடந்தாலும் சரி, ஏதோ ஒரு மூலையில் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். அதன்பிறகு, சசிகலா பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சசிகலாவை பற்றி பேச தற்போது நேரம் இல்லை வேற ஒன்றை பேசுவோம் என்று மறுத்து விட்டார்.
Read more – சசிகலாவிற்கு ஆதரவு தருகிறாரா சரத்குமார் : இன்று நேரில் சந்தித்து நல விசாரிப்பு
முன்னதாக செல்லூர் ராஜு பேச தொடங்கும் போது, நமது அண்ணன் முதல்வர் ஓ.பி.எஸ்.’ என்று கூறி பிறகு சுதாரித்து கொண்டு எடப்பாடி பழனிசாமி என்று மாற்றிவிட்டார். இந்த நிலையில், செல்லூர் ராஜு, “அண்ணன் முதல்வர் ஓ.பி.எஸ்.” எனக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




