சிறுமிக்கு தப்பு எது, சரி எது என்று சொல்லிக்கொடுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தது தற்போது வைரலாகி வருகிறது.
விராலிமலை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது சொந்த தொகுதியான விராலிமலை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஒரு சிறுமி கேள்வியெழுப்பினார். அதில், எங்கள் பகுதியில் முறையான குடிநீர் வசதி இல்லை. சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை” என கூறினார்.
Read more – அரசியலுக்கு வந்தேன் 300 கோடி இழந்தேன்… தோசையை திருப்பிய கமல்ஹாசன்
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த சிறுமியின் பெற்றோரிடம், உழைக்கும் ஒருவரை தவறாக பேசக்கூடாது. இந்த சாலையை போட்டு முடிப்பதற்குள் குறை கூறுவது எப்படி ? மூன்று நாட்களாக நான் பல ஊர்களுக்கு சென்றுவருகிறேன் யாரும் இதுபோல் கேட்கவில்லை. நீங்க, பெண் பிள்ளையை அதுவும் சிறு பிள்ளையை தப்பாக வளர்த்துள்ளீர்கள், தப்பாக தயார்படுத்தியுள்ளீர்கள். யார் நல்லவர், யார் கெட்டவர் என சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.