தமிழக மக்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ல் வெளியிடப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக கட்சி பாட்டாளி மக்கள் கட்சியுடன் 23 தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது. பிற கட்சிகளின் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் மட்டுமே இருக்கிறது. மேலும், திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு ஆயுத்த நிலையில் உள்ளதால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவே தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.
இந்த நிலையில், தமிழக மக்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ல் வெளியிடப்படும் என அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்கள் வாழ்வை மேம்படுத்தவும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
Read more – புதுச்சேரியில் திடீர் திருப்பம் : என். ஆர். காங்கிரஸில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ
மேலும், மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும் என்றும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.