திமுக கழகத்தில் கடின உழைப்பால் மட்டுமே தலைமை பதவிக்கு வந்தேன் என்று திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராயபுரம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது; தமிழகத்தில் திமுக ஆட்சி மட்டுமே ஒளிமயமாக இருக்கும். திமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை கதாநாயகனாகவும், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன், அதுவும் காமெடி வில்லன் என்று விமர்சனம் செய்தார்.
Read more – கடம்பூர் ராஜு கார் அருகே பட்டாசு வைத்த விவகாரம் : அமமுக தொண்டர்கள் மீது வழக்கு பதிவு
தமிழகத்தில் பா.ஜ.க, அதிமுக மூலம் ஆட்சியமைக்க நினைக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல், முதல்வராவதற்கு கொஞ்சம் ராசி வேண்டும். அந்த ராசி ஸ்டாலினுக்கு துளியும் இல்லை. திறமையும் உழைப்பும் இல்லாமல் ஸ்டாலினால் எப்படி முதல்வராக முடியும் என்று கேட்டார். இதற்கு இப்பொழுது நான் பதில் சொல்லிக்கிறேன்.
திமுக கழகத்தில் கடின உழைப்பால் மட்டுமே தலைமை பதவிக்கு வந்தேன், தவிர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததுபோல தகுதி இல்லாமல் நான் வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.