திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பெற்றுள்ள தொகுதி பங்கீடு பின்வருமாறு ;
காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 6 இடங்களும்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கி இருக்கிறது. மீதம் உள்ள 174 தொகுதிகளில் திமுக தனித்து போட்டியிடுகிறது.
Read more – அமமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : யார் யார் எந்த தொகுதியில் போட்டி ?
இந்தநிலையில், திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் எந்த இடங்களில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட இருக்கிறார்.