திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை :
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டு கூறியதாவது :
நேற்று வெளியான திமுகவின் வேட்பாளர் பட்டியல் முதல் கதாநாயகன். தற்போது இந்த தேர்தல் அறிக்கை இரண்டாவது கதாநாயகன். இதை செய்தியாளர்கள் கவனமுடன் கேட்டு தலைப்பு செய்திகளில் பொட்டுமாறு கோரிக்கை வைத்தார்.
- திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
*அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
*பொங்கல் திருநாள் மாநில பண்பாட்டு தினமாக கொண்டாடப்படும்.
*ஆவின்பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
*சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
*சொத்துவரி அதிகரிக்கப்படாது.
*பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.4-ம் விலை குறைக்கப்படும்.
*ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
*சைபர் காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
*நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறப்படும்.
*கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
*பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்..அவர்களின் ஓய்வு ஊதியம், குடும்ப நிதி ஊதியம் உயர்த்தப்படும்.
*ரேசன் கடைகளில் ஒருகிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுவதோடு உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்.
*அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.
*மகளிருக்கு பேருகால உதவித்தொகை ரூ. 24 ஆயிரம் வழங்கப்படும். அரசு ஊழியருக்கு பேருகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.
*கைம் பெண்கள், மற்றும் 50 வயது கடந்து திருமணமாகாத பெண்கள், வயதானவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும்.
*மக்களிடம் பெரும் மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
*கலைஞர் பெயரில் உணவகம்
போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.