அமமுகவுடன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி வைத்து 3 தொகுதிகளை பெற்றுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக மற்றும் அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்த நிலைப்பாடுகளை அவ்வப்போது வெளியிடும் போது டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
Read more – புதுச்சேரி பா.ஜ.க கூட்டணியில் இணைந்த என்.ஆர். காங்கிரஸ்…
இந்தநிலையில் தற்போது அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம் கட்சி கூட்டணி வைத்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இடிஹதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.