தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எந்த கட்சியுடன் எந்த காட்சிகள் கூட்டணி சேருகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி இந்த சட்டசபை தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக உடனான கூட்டணி குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழகத்தில் இன்னும் தேர்தலுக்கு 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால் கூட்டணி தொடர்பான பணியைத் தொடங்குவதே இப்பொழுது சாத்தியமாகும்.
அதிமுகவிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 20% சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. அதேபோல் எங்களது தேமுதிக கட்சியும் என்ன விஷயத்திற்காக கூட்டணி அமைக்க இருக்கிறோம் என்று காத்திருந்து பாருங்கள்.
Read more – கமல்ஹாசன் களத்தில் குதித்தாலும் ஒருபோதும் கரையாது தி.மு.க… மு.க.ஸ்டாலினே என் மூச்சு – வைகோ பேச்சு..
தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி 234 தொகுதிகளிலும் போட்டி போடுவதற்கு தயாராக இருக்கிறோம். மேலும் அனைத்து இடங்களிலும் தேர்தல் பூத் அமைத்து வருகிறோம் என்றார். கொரோனா காலம் என்பதால் ஒரு வருட காலம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளக்கூடாது, மிகப்பெரிய ஒரு கூட்டத்தை சேர்க்கக் கூடாது என்பதற்காகவே தேமுதிக விலகி இருந்தது.
ஆனால், மக்களுக்காக தொடர்ந்து தேமுதிக குரல் எழுப்பியது உண்மை. விவசாயிகள் பிரச்சினைகள், மருத்துவர்கள் பிரச்சனை, மாணவர்கள் பிரச்சினை என எதுவாக இருந்தாலும் அதற்கு இதுவே சாட்சி என்றும் குறிப்பிட்டார்.




