தமிழர்களை பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதே வரலாறு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி :
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் தமிழகத்தில் 3 ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் கன்னியாகுமரியில் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு கூறியதாவது :
உங்கள் சிறப்பான வரவேற்புக்கு என் மனமார நன்றிகள். இந்த நேரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரை நினைவு கூர்கிறேன். என்னதான் மற்ற அரசுகள் அவரை மிரட்டியபோது ஒரு நாளும் பின் வாங்காமல் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தார். எளிய மக்களை முன்னேற செய்து வாழ்வை ஒளிரச்செய்தவர். அப்படிப்பட்ட ஒரு வலிமை மிக்க மனிதரை இழந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
அதன்பிறகு, டெல்லியில் உள்ள மோடி அரசு தமிழ் மொழிக்கோ, தமிழ் நாகரிகத்துக்கு மதிப்பு கொடுப்பது இல்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மோடிக்கு தலையாட்டி பொம்மையாகவே இருக்கிறார். உண்மையில் யார் முன்னிறுத்தி செயல்படுபவரோ அவர் தான் முதல்வர் என்றார்.
Read more – 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் : திருச்சியில் 7 ம் தேதி அறிவிக்கும் மு.க. ஸ்டாலின்
மேலும், தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றார். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என்றும் தெரிவித்துள்ளார்.