மக்களின் நலன்தான் எங்களின் சுயநலம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மிக முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளநிலையில், 2019 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை போலவே இப்பொழுது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளின் தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது; எங்களது ஒரே சுயநலம், மக்களின் நலன் மட்டுமே. அவர்கள் ஆட்சி அமைக்க கோடி கோடியாய் கொட்டுகிறார்கள். ஆனால், நாங்கள் நல்ல கொள்கைகளை கொட்டுகிறோம், ஆக சிறந்த நல்ல கருத்துக்களை விதைக்கிறோம் என்றார்.
Read more – கருத்து கணிப்பு ஒருபோதும் மக்கள் மனதை மாற்றாது, அதிமுக தான் வெற்றிபெறும் : முதல்வர், துணைமுதல்வர் உறுதி
மேலும், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இலவசங்களைக் கொடுத்தே மக்களை அடிமையாக்கி வைத்துள்ளனர். தமிழகம் அப்படி செய்தால் ஆட்கள் மாறுவார்களே தவிர, நிர்வாகம் மாறாது. விருப்பமிருந்தால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். நான் ஓட்டுக்காக நிற்கவில்லை. நாட்டுக்காக நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.