திமுக தேர்தல் மாநாடு வரும் மார்ச் 14 ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி:
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றும், அதற்கான தேதியை அறிவித்தும் தலைமையிடம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று இதற்கான விண்ணப்ப மனுக்களை பெறுவதற்காக ஏராளமான தி.மு.க.வினர் சென்னை தேனாம் பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் குவிந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
Read more – ஜெயலலிதாவால் துரோகி என அடையாளம் காணப்பட்டவர் டி.டி.வி.தினகரன் : கே.பி. முனுசாமி
இந்நிலையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வரும் மார்ச் 14 ம் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார்.