தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சிமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ராணிப்பேட்டை பனப்பாகம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். பொது மக்களின் குறைகளை மனுக்களாய் பெற்ற அவர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் கூறியதாவது:
வரும் சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதியளித்தார். திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் இப்பொழுது ஆளும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து அனுமதித்தது என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 31.01.2021!!!
மேலும், திமுக ஆட்சி அமையும்போது நீட் தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார். அதனைத்தொடர்ந்து, தமிழக மக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களை ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்பட்டு மக்கள் விரும்பும் அரசாக திமுக அமையும் என்று உறுதியளித்தார்.