அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்தும் மற்றும் வேட்பாளர் பட்டியல் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வந்தது.
இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பா.ம.கவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more – பாஜக விடுத்த சவால்.. அதே தொகுதியில் களமிறங்கிய மம்தா…
இந்த ஒப்பந்த படிவமானது இரவோடு இரவாக அ.தி.மு.க. தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது. மேலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.