திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் என உறுதியாகியுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் பிற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போது சிபிஎம் மட்டும் இழுபறியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தி.மு.க வுடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தி.மு.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
Read more – அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா தேமுதிக ? மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவரச ஆலோசனை
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், ம.தி.மு.க, சி.பி.ஐ, வி.சி.க கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.