தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (ஏப்.6) மாலை 7 மணியுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் அனைத்து கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.
- தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டம் ஊர்வலத்தை நாளை இரவு 7 மணிக்கு பின்னர் நடத்தக்கூடாது.
- தேர்தல் சம்பந்தமாக சினிமா தியேட்டர் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமோ பிரசாரங்கள் வெளியிடக்கூடாது.
- பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவோ, இசை நிகழ்ச்சிகள் மூலமாகவோ பிரச்சாரம் செய்யக்கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை.
- ஒரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளராக இல்லாத வெளியாட்கள் ஏப்ரல் 4 ம் தேதி இரவு 7 மணிக்குள் வெளியேற வேண்டும்.
- ஒருவேளை அந்த குறிப்பிட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் பிரச்சாரமும் மேற்கொள்ள கூடாது.
- தொகுதியின் வாக்காளர் அல்லாத வெளியாட்கள் அனைவரும் 4 ம் தேதி இரவு 7 மணிக்குள் வெளியேறி விட்டார்களா என தங்கும் விடுதி, நட்சத்திர ஓட்டல்களில் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
- சட்டமன்றத் தொகுதிக்கு வெளியிலிருந்து உள்ளே வரும் வாகனங்களை ந்தந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து சோதனை செய்யவேண்டும்.
- ர்தல் நாளன்று ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும். அதாவது, தன்னுடைய பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தன்னுடைய தேர்தல் பொது முகவர் பயன்பாட்டுக்கான வாகனம், வேட்பாளருக்காக அல்லது கட்சிக்காக பணியாற்றுபவர்களுக்கான வாகனம் என்ற கணக்கில் இருக்க வேண்டும்.
- அனுமதிக்கப்பட்ட இந்த 3 வாகனங்களை மட்டுமே வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட வேண்டும்.
- வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறி பயன்படுத்தினால் அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும்.
- வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தற்காலிக பூத் அமைத்துக்கொள்ளலாம்.
- அந்த குறிப்பிட்ட தற்காலிக பூத்தில் வாக்காளராக உள்ள 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும். மேலும், அங்கு உணவு பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது.