திமுக வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின்போது கல்லூரி படிக்கும் பெண்ணின் கையில் முத்தம் கொடுத்து ஓட்டு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற 2 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெரும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிய இருப்பதால் அனைத்து கட்சிகளும் முண்டியடித்து கொண்டு ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கவுண்டன்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் பையா கவுண்டர் போட்டியிடுகிறார். தனக்காக ஓட்டு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் முதல்முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை பார்த்து யாருக்கு வாக்களிக்க போகிறாய்? என கேட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த கல்லூரி பெண் உங்களுக்கு தான் என பதிலளிக்க, திடீரென அந்த வேட்பாளர் கல்லூரி படிக்கும் பெண்ணின் கையில் முத்தமிட்டு, தோளோடு அணைத்து கொண்டார். இதனால் பொதுமக்கள், தொண்டர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த நேரத்தில் அந்த பெண் செய்வதறியாது பொய் சிரிப்புடன் மெல்ல நகர்ந்தார்.
ஏற்கனவே, திமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் ராசா பெண்களை பற்றி இழிவாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.