தமிழகம் வெற்றிநடை போடவில்லை கடன் சுமையில் தத்தளிக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பொன்னேரி மற்றும் மாதவரம் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர்,
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகள் அமமுக தான் ஆட்சியமைக்கும். எங்கள் கூட்டணியை கைநீட்டி யாராவது குறை கூற முடியுமா? கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி அமைத்த அதிமுக என்ன செய்தது. நிதி பற்றாக்குறை என்று கூறி முதியவர்களுக்கு மாதம்தோறும் வழங்கி வரும் ஊதியத்தொகையை தடுத்தது. இப்பொழுது சொல்லுங்கள் தமிழகம் வெற்றிநடை போடுகிறதா.. 7 லட்சம் கோடி கடன் சுமையில் தத்தளிக்கிறது.
அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்தால் அப்பகுதி வட்டசெயலாளர்களே காவல்துறை ஆய்வாளர்கள். பிரியாணி கடை, டீக்கடை என்று உள்புகுந்து அராஜகம் செய்வார்கள். 1000, 2000 என்று வழங்கி உங்களை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.
Read more – நத்தம் விஸ்வநாதனை குத்திய புதிய வழக்கு.. ஆரத்திக்கு நோட்… போடுவாங்களா கேட்..
நாங்கள் அப்படியில்லை வாஷிங்மெஷின், டிவி, குக்கர் தருவதாக கூறி ஏமாற்றவில்லை. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்று உறுதியளிக்கிறோம். நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.




