சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் எடப்பாடிக்கு ஆப்பு என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருச்சி :
சிறையிலிருந்து வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு வைப்பார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் சுற்றுபயணம் செய்து தேர்தல் பரப்புரை ஆற்றிவரும் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மாவட்டம், லால்குடியில் பொதுமக்கள் முன்பு பேசினார்.
பிரச்சாரத்தில் உதயநிதி பேசுகையில் :
மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா துணிச்சலாக கேட்ட நிலையில், மோடிதான் எங்க டாடி என்று சொல்லும் நிலையில் அதிமுகவினர் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை அதிமுகவினர் மறந்து விட்டனர். முதலமைச்சர் வேட்பாளரையே நாங்கதான் சொல்வோம் என்று பா.ஜ.க மாநில தலைவர் முருகன் சொல்லும் அளவுக்கு மோசமான நிலையில் அதிமுகவினர் உள்ளனர்.
Read more – இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசி உருமாற்றம் அடைந்த வைரஸை தடுக்கும் : மத்திய சுகாதாரத்துறை
இபிஎஸ், ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கும் விசுவாசமாக இல்லை. அவர்கள் சின்னம்மா என்று அழைத்த சசிகலாவுக்கும் விசுவாசமாக இல்லை. சிறையிலிருந்து ஜனவரி 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு வைப்பார். என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.




