அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது ஏழை எளிய மக்களுக்கான கூட்டணி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் :
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விழுப்புரத்தில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், இன்று பிரதமர் மோடி சொல்கிறார் தமிழ் படிக்க ஆசை என்று தெரிவித்த அவர், நான் மீண்டும் தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றார்.
இன்றைய தினம் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியோடு செயல்பட்டு வருகிறோம் என்பதை பகிர்ந்து கொள்ளும் தருணம் இது. பாஜக – அதிமுக கூட்டணி என்றுமே மக்களுக்கான கூட்டணி. இந்த கூட்டணியானது ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைக்கும் என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 01.03.2021!!!
தொடர்ந்து பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி ஊழல் நிறைந்த ஆட்சி. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. கடந்த எழுபது ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடு இல்லை. ஏழு ஆண்டுகளில் மோடி அரசு அதனை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.




