தர்மபுரிக்கு உட்பட்ட பென்னாகரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க சார்பில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி :
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு கட்டமாக நடைபெற நிலையில் ஆளும் அதிமுக கட்சி மற்றும் திமுக போன்ற முன்னணி கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற குழப்பநிலை உள்ளது.
இந்தநிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி போட்டியிட போவதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது ;
பென்னாகரம் தொகுதியில் பா.ஜனதா இளைஞர் அணி மாநில துணை தலைவியாக இருந்து வருகிறேன். எனது தந்தை வீரப்பனை அந்த தொகுதி மக்கள் அனைவரும் நன்கு அறிந்தவர்கள். அதனால் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். மேலும், நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
Read more – ஓட்டுக்கு பணமும் இல்லை..எங்கள் கூட்டணியை வெல்ல இங்கு எவருமில்லை.. சரத்குமாரின் புதிய கூட்டணி
ஏற்கனவே வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தி.மு.க. கூட்டணி அமைத்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.