தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு அளித்துள்ளார்.
சென்னை :
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீட்டில் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளுக்கிடையே 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் இழுபறியில் உள்ளது. இந்தநிலையில், தற்போது தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் இடத்தை குறிப்பிடாமல் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்பமனு அளித்துள்ளார்.
இதுகுறித்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ; தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் விருப்பமனு அளித்தேன். என்னை தந்தை விஜயகாந்திடம் ஆசீர்வாதம் வாங்கியபோது, ‘’சென்றுவா வெற்றி நமதே!’’ என்று வாழ்த்தியதாக கூறினார் என்றார்.
Read more – ஆளுமை மிக்க பெண் தலைவராக தமிழிசை தேர்வு …
மேலும், கட்சி நிர்வாகிகள் எந்த தொகுதியை காட்டுகிறார்களோ அதில் நிற்பேன். எங்கு நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றிபெற வைப்பார்கள் என தெரிவித்தார். ஏற்கனவே அக்கட்சியின் பொருளாளர் மற்றும் இவரது தாயரான பிரேமலதா விஜயகாந்த் நேற்று விருப்பமனு அளித்தபோதும், எந்த இடத்தில் போட்டியிட போவதாக தெரிவிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.