இந்த வருடத்தில் அதிக அளவிலான பிராட்பேண்ட் சேவையில் வாடிக்கையாளர்களை பெற்று ஜியோ நிறுவனம் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ராய் நிறுவனம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையில் சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்கும் சிறந்த நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் வயர் மற்றும் வயர்லெஸ் சேவையும் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் பிஎஸ்என்எல் நிறுவனம் வயர்ட் பிராண்ட்பேண்ட் சேவையில் முதலிடம் பெற்றுள்ளது.
இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 78 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வயர்லெஸ் சேவையில் ஜியோ முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 40.41 கோடி ஆகும்.
READ ALSO- ஃபேஸ்புக் மீது வழக்கு!
இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலகட்டம் மட்டுமே கணக்கில் கொண்டு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் வயர்ட் பிரிவில் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஏசிடி, ஜியோ, ஹாத்வே கேபிளும் வயர்லெஸ் பிரிவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல், டிகோனோ போன்றவை முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




