ஃபேஸ்புக் நிறுவனத்தில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தராமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று சமூகவலைதளங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது ஃபேஸ்புக்.
இந்த நிலையில் இதன் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதன் பயனாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது இந்நிறுவனத்தில் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்காமல், குறைவான ஊதியத்திற்கு எச் 1 பி விசாதாரர்களை பணியமர்த்தும் நடைமுறையை கடைபிடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
READ ALSO- விவோ ஒய்52 எஸ்: எப்போது அறிமுகம்?
எனவே, இதற்கான உரிய விளக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் தர வேண்டும் எனவும், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் இருக்கிறது எனவும், சட்ட மீறல் தொடர்பாகவும் அரசு ஃபேஸ்புக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.