பிஎஸ்என்எல் நிறுவனம் பாரத் ஃபைபர் சலுகை கட்டண முறையில் புதிய வசதியை அறிமுக படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பாரத் ஃபைபர் கட்டணங்களின் சலுகைகளை வருடாந்திர அடிப்படையில் செலுத்த பயனர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுக படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வசதி தற்போது ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1499 ஆகிய மாதாந்திர சலுகைகளுக்கு மட்டும் தற்போது தரப்படுகிறது. அறிவிக்கப்பட்ட ரூ. 449 சலுகையில் வருடாந்திர கட்டண முறை புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
முன்னர் ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், தற்போது வாடிக்கையாளர்கள் மொத்தமாக 12 மாதங்களுக்கும் சேர்த்தே செலுத்தலாம்.
READ MORE- ஒப்போவின் புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம்!
அவ்வாறு செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி நீட்டிக்க இந்த வருடம் ஏப்ரல் 3 வரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




