இந்திய சந்தையில் டைவாவின் குறைந்த விலையிலான ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் டைவாவின் 43 இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபுல் ஹெச்டி ரெசல்யூஷன், குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம், அலெக்சா வாய்ஸ், தி பிக் வால் போன்றவையும் இதன் சிறப்பம்சங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதி கொண்டு, வீட்டு சாதனங்களையும் இயக்கலாம் என்பது கூடுதல் ப்ளஸ். புதிய டைவா ஸ்மார்ட் டிவி ஏ53 குவாட் கோர் ப்ராசஸ், 1 ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
READ MORE- குறைந்த விலையில் சவுண்ட் ஒன் இயர்பட்ஸ் அறிமுகம்!
டைவா நிறுவனத்தின் சொந்த யுஐ ஆக தி பிக் வால் மென்பொருளும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டைவா D4QFS ஸ்மார்ட்டிவி விலை ரூ. 24,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அனைத்து சில்லறை மையங்களிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.