FAU-G கேம் முன்பதிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன்னுக்கும் மேலான பதிவுகளை கொண்டு சாதனை படைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதற்கான காரணமாக சொல்லப்பட்டது,
தகவல் திருட்டு மற்றும் தனிநபர் பாதுகாப்பு போன்றவை. இந்த நிலையில் பப்ஜிக்கு மாற்றாக, FAU-G என்ற மொபைல் கேம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட பப்ஜியை போலவே களம் கொண்ட இந்த மொபைல் கேமின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் முன் பதிவு தொடங்கிய மூன்றே நாட்களில் FAU-G கேம் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் முன் பதிவுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, பப்ஜி கேம் 2,00,000க்கும் மேற்பட்ட பதிவுகளையும் FAU-G கேம் சுமார் அறுபதாயிரம் பதிவுகளையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
READ ALSO- வோடோஃபோன் – ஐடியா வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அப்டேட்!
இந்த கேம் வரும் அக்டோபரில் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழலால் தள்ளிப்போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.