இந்தியாவில் பாஜி கேம் எப்போது வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட பல செயலிகளுக்கு தடை விதித்திருந்தது.
இதனையடுத்து, பப்ஜிக்கு மாற்றாக பாஜி கேம் வெளியாகும் என தகவல் வந்தது. தற்போது பாஜி கேமின் இந்திய வெளியீடு எப்போது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள என்கோர் நிறுவனம் உருவாக்கி உள்ள பாஜி கேம் ட்ரைய்லரில் பாஜி கேம் இந்த மாதம் இறுதியில் அதாவது ஜனவரி 26 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் ட்ரெய்லர் காட்சிகளில் தீய சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுக்காப்பது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
READ MORE- பொங்கலுக்கு வரும் சாம்சங்கின் பிளாஷிப் ஸ்மார்ட்ஃபோன்!
பாஜி கேமிற்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. கேம் குறித்தான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.




