முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிலிக்ஸ் பயனாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு தனது இலவச சேவையை அளித்துள்ளது.

முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிலிக்ஸ் பயனாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு தனது இலவச சேவையை அளித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவும் வார இறுதியில் பயனாளர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக நெட்ஃபிலிக்ஸ் அறிவித்து இருந்தது.
இதனையடுத்து தற்போது இந்த வார இறுதியில் அதாவது டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களுக்கு தனது இலவச ஸ்ட்ரீமிங் திட்டத்தை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்.
நெட்ஃபிலிக்ஸ்ஸின் இந்த Stream Fest-ஐ இலவசமாக இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தி கொள்வதன் மூலம் பல ப்ளாக் பஸ்டர் படங்கள், டாக்குமெண்ட்ரி, வெப் சீரிஸ் போன்றவற்றை ரசிகர்கள் இரு நாட்களுக்கு இலவசமாக பார்க்கலாம்.




