மோட்டோரோலோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
மோட்டோரோலோ நிறுவனத்தின் மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்ஃபோன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் வெளியாகி இருக்கிறது.
கூகுள் பிளே கன்சோலின்படி இந்த ஸ்மார்ட்ஃபோனில் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அட்ரினோ 610 ஜிபியு, 6.5 இன்ச் 720*1600 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு இந்த மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்ஃபோனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியிடப்பட்டது.
READ MORE- இந்திய சந்தையில் ஆப்பிளின் அதிரடி திட்டம்!
அதில் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3ஜிபி ரேம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கில் கோர் சோதனையில் 253 புள்ளிகளை பெற்றுள்ளது. மல்டி கோரில் 1233 புள்ளிகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.