ஆப்பிளின் ஐஃபோன்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஐஃபோன்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஃபோன் சீரிஸ் 12, ஐஃபோன் சீரிஸ் 11 மற்றும் இதர மாடல்களுக்கு ரூ. 16,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை மேபிள் ஆப்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே கிடைக்கிறது. இதன் படி ஆப்பிள் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ. 8,000 சலுகையும், தனியார் வங்கி கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ. 9,000 வரையிலான கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
READ MORE- ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் வெளியீட்டு விவரம்!
ஒவ்வொரு ஐஃபோன் மாடலுக்கும் தனித்தனியான தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பது குறித்து பார்க்கலாம்.
- ஐஃபோன் 12 ப்ரோ மேக்ஸ்- ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி,
- ஐஃபோன் 12 ப்ரோ – ரூ. 3,500 தள்ளுபடி + ரூ. 5,000 கேஷ்பேக்,
- ஐஃபோன் 12 – ரூ. 3000 தள்ளுபடி + ரூ. 6,000 கேஷ்பேக்,
- ஐஃபோன் 12 மினி – ரூ. 3000 தள்ளுபடி + ரூ. 9,000 கேஷ்பேக்,
இவை தவிர, ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐஃபோன் 11, ஐஃபோன் எக்ஸ்ஆர், ஐஃபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.




