Origami என்பது காகிதத்தை மடித்தும் வளைத்தும் வித்தியாசமான உருவங்கள் செய்யும் ஒரு பழமையான ஜப்பானிய கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கிய இக்கலை 1900ம் ஆண்டிலிருந்து உலகம் முழுக்க பிரபலமடையத் தொடங்கியது. தற்போது பாரம்பரிய முறைப்படி மட்டும் அல்லாமல் நவீன வடிவிலும் இக்கலை புகழ்பெற்று வருகிறது. தற்போது உலகம் முழுக்க இருக்கும் கணினித்துறை விஞ்ஞானிகள் Origamiஐ கணினித் தொழில்நுட்பமாக மாற்ற முயற்வித்து வருகின்றனர். மிகவும் கடினமான உருவங்களை Origami மூலம் உருவாக்குவது மிகவும் கடினாமாக இருந்தது. அதை போக்குவதற்காக நமக்கு வேண்டிய வடிவங்களை 3டி முறையில் மடித்துக்கொள்ளும் செயல்முறையை நமக்கு கற்று கொடுக்கும் Algorithmஐ உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
Origamizer என பெயரிடப்பட்டுள்ள இந்த மென்பொருள் நமக்கு வேண்டிய வடிவத்தை நாம் தேர்வு செய்தவுடன் அதனை எப்படி மடிக்க வேண்டும் என்பன போன்ற அனைத்து தகவல்களையும் நமக்கு காண்பித்து விடும். எத்தகைய வடிவங்களாய் இருந்தாலும் அவற்றை மடிக்கவேண்டிய எண்னிக்கையை குறைத்துவிடும். இதனால் நமக்குத் தேவையான வடிவம் எளிதாகவும் நேர்த்தியாகவும் கிடைக்கும். Origami எனப்படுவது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் கட்டுமானத்துறை, மருத்துவத்துறை, ஆட்டொமொபைல் , ரோபோடிக்ஸ், கணிதம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே அத்துறை சார் நிபுணர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.