டாடா ஸ்கை அறிவித்துள்ள புதிய இலவச சலுகை அறிவித்துள்ளது.

டாடா ஸ்கை நிறுவனம் அதன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் அதன் பயனர்களுக்கு இலவச வைஃபை ரவுட்டரை வழங்குகிறது. இது நிறுவனத்தின் – இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி – டூயல் பேண்ட் வைஃபை ரவுட்டர் ஆகும். வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் எந்தவொரு திட்டத்திலும் இலவச ரவுட்டரை பெறலாம். இலவச ரவுட்டர் உடன் டாடா ஸ்கை நிறுவனம் அதன் பயனர்களுக்கான இலவச எக்ஸ்பெர்ட் இன்ஸ்ட்டாலேஷனையும் வழங்குகிறது.
300 எம்.பி.பி.எஸ் வேகத்தை நாங்கள் இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், டாடா ஸ்கை பிராட்பேண்ட் வழங்கும் மிக வேகமான திட்டம் 300 எம்.பி.பி.எஸ் திட்டமே ஆகும்! இந்த திட்டங்கள் 50 Mbps முதல் 300 Mbps வரையிலான வேகத்தை மற்றும் வரம்பற்ற டேட்டாவையும் வழங்குகின்றன. டாடா ஸ்கை திட்டங்களிலிருந்து அன்லிமிடெட் (3.3TB அல்லது 3,300GB) டேட்டா நன்மையானது நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்புடன் வருகிறது.
டாடா ஸ்கை நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்கள் :
டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவையானது அதன் பயனர்களுக்கு ஐந்து திட்டங்களை வழங்கி வருகிறது. 50 எம்.பி.பி.எஸ் திட்டம் ஒரு மாதம் மட்டுமே வாங்குவதற்கு கிடைக்கவில்லை; பயனர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு இதைப் பெறலாம், இது அவர்களுக்கு ரூ.2097 (ஜிஎஸ்டி இல்லாமல்) செலவாகும். 100 எம்.பி.பி.எஸ் திட்டம் மாதாந்திர சேவையான ரூ.950 க்கு கிடைக்கிறது. பின்னர் 150 எம்.பி.பி.எஸ் திட்டமும் உள்ளது, இது மாத அடிப்படையில் ரூ.1,050 க்கு கிடைக்கிறது. 200 எம்.பி.பி.எஸ் திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ.1,150 க்கும், 300 எம்.பி.பி.எஸ் திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ.1,600 க்கும் கிடைக்கிறது. மேற்குறிப்பிட்ட அனைத்து விலைகளும் ஜிஎஸ்டி சேர்க்காத விலை நிர்ணயங்கள் ஆகும் மற்றும் நீண்ட காலம் செல்லுபடியாகும் விருப்பங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.




