வாட்ஸப்பால் ட்ரெண்ட் ஆகும் டெலிகிராம்!
சமீபத்தில் வாட்ஸப்பின் பிரைவசி நடவடிக்கை பயனாளர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதால், பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகளை அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா, பின்லாந்து, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவச செயலிகளின் பட்டியலில் முன்னணியில் சிக்னல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிகப்படியான தரவிறக்கத்தால் சர்வர் முடங்கி பயனர்கள் லாகின் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் சிக்னல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
READ MORE- பப்ஜி இந்திய வெளியீடு அப்டேட்!
எலன் மஸ்க், எட்வர்ட் ஸ்னோடென் போன்றோரும் வாட்ஸப் பயன்படுத்த வேண்டாம் என தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.