ரூ.2,499 பீட்டல் பிளிக்ஸ் எஸ்1 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகியுள்ளது.
பீட்டல் நிறுவனம் பிளிக்ஸ் எஸ்1 ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்துள்ளது. 1.4 அங்குல டிஸ்பிளே கொண்ட இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 முதல் 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என இந்த நிறுவனம் கூறுகிறது.
புளூடூத் 5.0 கொண்ட இந்த வாட்ச்சை ஆப்ஸ் மூலம் ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு போன்களுடன் இணைத்து பயன்படுத்தலாம்.
இதயத்துடிப்பு மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து தெரிவிக்கும். அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்றவற்றை இந்த வாட்ச் மூலமாகவே ஏற்கவும், படிக்கவும் முடியும். விலை சுமார் ₹2,499 அறிமுகமாகியுள்ளது