ரூ.8,000க்கு கம்மியா சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி மாடல் அறிமுகமாகியுள்ளது.

தென் கொரிய நிறுவனமான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ் 20 எஃப்இயின் 5 ஜி வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போனின் 4 ஜி மாறுபாடு மட்டும் இந்தியாவில் ரூ.49,999 க்கு வாங்க கிடைத்த நிலைப்பாட்டில் தற்போது 5ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.55,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிறப்பு அறிமுக சலுகையாக, இது ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஸ்மார்ட்போன், இன்று அதாவது மார்ச் 31 முதல் ஆன்லைனில் – சாம்சங்.காம், அமேசான்.இன் – மற்றும் ஆப்லைனில் – சாம்சங் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் – வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது (1 டிபி வரை).
- ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு
- 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா (எஃப் / 2.0 லென்ஸ்)
- வயர்லெஸ் சார்ஜிங் 2.0 க்கான ஆதரவுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- வயர்லெஸ் பவர்ஷேர்
- 5ஜி, தவிர, 4 ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகிய சிறப்பம்சங்களுடன் இருக்கிறது.




