உலகின் மிகப்பெரிய இரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது, சுமார் 1.23 லட்சம் கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது
நாட்டின் பெரிய பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் ட்ராக் மேன்கள் எப்பொழுதும் தண்டவாளங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவர். ரயில் நிலையத்திலிருந்து வேலை செய்யவேண்டிய இடம் எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கு நடந்தே தான் செல்ல வேண்டும். ஏனெனில் இரயில்வே தண்டவாளத்தில் வாகனத்தில் செல்வது சாத்தியமில்லாத காரியம். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் ரயில் சைக்கிள் என்ற ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு ரயில்வேயின் மார்வாரில் உள்ள பொறியாளர்கள் எண்ணத்தில் உருவானதுதான் இந்த எடை குறைந்த ரயில்வே சைக்கிள். பங்கஜ் சோயின், எஸ்.ஆர்.டென், வெஸ்ட் அஜ்மீர் இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள்
நாம் சாதாரணமாக ஓட்டும் சைக்கிளில் சிறிது மாற்றங்கள் செய்து இந்த ரயில் பைசைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இரும்புக் கம்பியினால் முன்பக்க சக்கரம் மற்றும் பக்கவாட்டில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட இரும்பு சக்கரங்கள் ரயில்வே தண்டவாளங்களில் அப்படியே பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவசரமாக பழுதுபார்க்கும் பணி எதுவும் இருந்தால் இந்த ரயில் சைக்கிள்களை பயன்படுத்தி பிராக் மேன்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றடைய முடியும். இதனால் நேரத்தை போதுமான அளவு மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ரயில் சைக்கிள் மூலம் ரயில்கள் டிராக்கில் செல்வதற்கு முன் தண்டவாளம் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.
நடந்து செல்லும் ஒருவர் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்டவாளத்தை ஆய்வு செய்ய முடியும். இந்த மிதிவண்டியில் சென்றால் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆய்வு செய்யலாம்.
ஊரடங்கால் நாட்டின் அனைத்து ரயில்களும் முடக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பில்லாமல் காணப்படுகின்றது. எனவே ரயில்கள் இயங்கும் தடவாளங்களில் இந்த ரயில் சைக்கிள் கொண்டு ரயில் தடங்களைப் பரிசோதித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் சைக்கிள் வருகையை ட்ராக்மேன்கள் தீபாவளி போல் கொண்டாடுகின்றனர்