வாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள ‘கம்யூனிட்டி’ என்கிற அப்டேட் பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை கிடைக்கும் வகையிலான சிறப்பம்சங்களுடன் தயாராகியுள்ளது.
நவீனமான மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கு வேண்டிய முக்கிய அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது வாட்ஸ் ஆப். விரைவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ‘கம்யூனிட்டி’ வசதி பலரையும் எதிர்நோக்க வைத்துள்ளது. சமூகவலைதளங்களில் தனிநபர் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இவ்வசதி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதியதாக அறிமுகமாகும் வாட்ஸ் ஆப் கம்யூனிட்டி மூலம், பல்வேறு குழுக்களை ஒரே கம்யூனிட்டி டாப்பிக்கின் கீழ் ஒன்றிணைந்துவிடலாம். இதனால் பலதரப்பட்ட குழுக்களுக்கு அட்மினாக இருப்பவர்களுக்கு, இந்த வசதி எளிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு குரூப்புகள் ஒரே கம்யூனிட்டியின் கீழ் வருவதால், நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல்வேறு குழுக்களில் இருப்பவர்களை தேடும் தேவையும் இருக்காது. இந்த வசதி கடந்த சில மாதங்களாகவே பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இது பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
எதிர்காலத்தில் வாட்ஸ் ஆப்புக்கு கிடைக்கவுள்ள அப்டேட்டுகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ள மெட்டா நிறுவனம், குறுந்தகவல்களுக்கு தனியாக எமோஜிக்களை அனுப்புவது, 32 நபர்களுக்கு குழுவாக ஆடியோ கால் செய்வது, 2 ஜி.பி வரையிலான கோப்புகளை அனுப்புவது மற்றும் பிறருடைய குறுந்தகவல்களை அட்மின் டெலிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு அப்டேட்டுகள் அடுத்தடுத்து அறிமுகமாகவுள்ளன.