செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் நுரையீரலின் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கடந்த ஒரு வருடமாக கொரோனா பெருந்தொற்று உலகயே முடக்கி போட்டு இருக்கிறது. பல நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும், பலன்கள் நெகட்டிவாகவே அமைந்தது.
இந்த நிலையில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள மூக்கில் மாதிரி சளி உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் நுரையீரலின் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
READ ALSO- அறிமுகமானது மைக்ரோமேக்ஸ் இன் நோட்:1 புது அம்சங்கள் என்ன?
Deep covid- XR எனப்படும் இந்த தொழில் நுட்பம் வேகமாகவும் அதே சமயம் துல்லியமாகவும் கணிக்க இது பயன்படும். ஆய்வு நிலையில் இருக்கும் இந்த வசதி மருத்துவர்கள் பயன்படுத்த நம்பத்தகுந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.