சியோமியின் புதிய எம்.ஐ. 11 ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் சியோமி நிறுவனம் கடந்த வாரம் எம்.ஐ11 ஸ்மார்ட்ஃபோனை விற்பனைக்கு கொண்டு வந்தது.
விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே 3,50,000 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே சியோமியின் எம்.ஐ.11 ஸ்மார்ட்ஃபோன் விற்பனை நடைபெற்று வருகிறது.
சியோமியின் புதிய எம்.ஐ.11 ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் அறிமுகமாகி உள்ளது. இதன் டிஸ்பிளே 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. அறிமுகமான உடனே 3,50,000 யூனிட்டுகள் விற்பனை என்பது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1677 கோடிகளை ஈட்டி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
READ MORE- அனைத்து நெட்வொர்க்கிற்கும் இலவச வாய்ஸ்கால் வழங்கும் ஜியோ!
மேலும் விற்பனை துவங்கிய ஏழே மணி நேரத்தில் 8,54,000 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது. சியோமியின் எம்.ஐ.11 ஸ்மார்ட்ஃபோன்னின் மதிப்பு இந்திய விலைப்படி ரூ. 45,000 எனவும், டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52,800 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




