நகையாகவோ, தங்க காசுகளாகவோ இருக்கும் தங்கத்தை வைத்து கடன் வாங்கலாம். தற்போது, டிஜிட்டல் கோல்டு, ஆன்லைன் கோல்டு, தங்கப்பத்திரம் ஆகியவற்றை வைத்தும் கடன் வழங்கப்படுகிறது.
அவ்வாறு, தங்க நகைக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
- வங்கிகளை தவிர்த்து பதிவுசெய்யப்பட்ட & அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனத்தில் மட்டுமே தங்கத்தை வைத்து கடன் வாங்க வேண்டும்.
- ஒரு நபருக்கு எவ்வளவு கடன்கொடுக்கலாம என்பது தங்கத்தின் மதிப்பின் அளவில் நிர்ணயிக்கப்படுகிறது.
- தங்க நகையில் செயற்கை கற்கள் பதிக்கப்பட்டு இருந்தால் அதற்கான எடை நீக்கப்பட்டு தங்கத்திற்கான எடைக்கு மட்டுமே கடன் வழங்குவார்கள்
- 24 காரட் தங்கமாக இருந்தால் அதற்கு உரிய மதிப்பில் கடன் தொகை கணக்கிடப்படும்.
- 22 காரட் தங்க நகைக்கு 18 காரட் நகையை விட அதிக தொகை வழங்கப்படும்.
- தங்கக் கடன் வழங்கும்போது உங்களின் கிரெடிட் ஸ்கோரும் பல இடங்களில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- இதன் அடிப்படியிலேயே வட்டி வசூலிக்க வேண்டும் என்று வங்கிகளும், நிதி நிறுவனங்களும் முடிவு செய்கின்றன.
- பொதுவாக தங்க நகைக்கான வட்டி விகிதம் 7% – 25% வரை விதிக்கப்படுகிறது.
- திரும்ப செலுத்தும் கால அளவு எவ்வளவு என்பதை கருத்தில் கொண்டு கடன் வாங்குங்கள்
- கடன் வாங்குபவர்கள் உரிய காலத்தில் தொகையை கட்டமுடியவில்லை எனில் தங்க நகை ஏலத்தில் விடப்படும்.
எனவே, நகைக்கடன் வாங்குபவர்கள் இதை கவனத்தில் கொண்டு கடன் வாங்குவது நல்லது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (26.07.2022)
22 காரட் ஆபரணத்தங்கம் 1கிராம் – ₹4,728
22 காரட் ஆபரணத்தங்கம் 1 சவரன் – ₹37,824
1 கிராம் வெள்ளியின் விலை – ₹60.80
1 கிலோ வெள்ளியின் விலை – ₹60,800.
-பா.ஈ.பரசுராமன்.