ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுத்தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் ஆகஸ்டு 25ம் தேதிமுதல் ஆகஸ்டு 31ம் தேதிவரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2,30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் ஆசிரியர் தகுதித்தேர்வு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் செப்டம்பர் 15ம் தேதிவரை கணினி மூலம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த அறிவிப்பு, தேர்வுக்கால அட்டவணை, அனுமதிச்சீட்டு விபரம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.