துளசியை அதிகமாக சாப்பிட்டால் விந்தணு குறைபாடு ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக சளி, இருமல் தீர துளசியை உட்கொள்வது வழக்கம். துளசி எண்ணற்ற பலன்களை அளிக்கிறது.
துளசியின் நன்மைகள்:
*ரத்த ஓட்டத்தை சீராக்கும்
*சிறுநீரக பாதிப்பை நீக்க உதவும்
*தோல் நோய்களை குணப்படுத்துகிறது
*சுவாச பிரச்சனைகளை சீராக்குகிறது
*ஆன்ட்டி பாக்டீரியாவாகவும் பயன்படுகிறது.
ஆனால், துளசி இலையை அதிக அளவில் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. அந்த வகையில், *கருவுற்றிருக்கும் பெண்கள் துளசி இலையை அதிகம் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
*நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தங்களுடைய உணவு முறையில் துளசியை அதிகமாக சேர்த்துக்கொண்டால் அது ரத்த ஓட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துமாம்.
*அதிகமாக துளசி உட்கொண்டால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு குறைய நேரிடும் என்றும் பெண்களுக்கு கருப்பை மற்றும் கருப்பைவாய் சுருக்கம் ஏற்படும் என்றும் சில ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*மேலும், பற்களை கரையாக்கும் என்றும், கல்லீரலை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.