தொழிலாளர் வருங்கால வைப்பநிதி நிறுவனத்தின் (EPFO)தொழிலாளர் பென்சன் திட்டம் 1995ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் கணவன்/மனைவி, பிள்ளைகளுக்கும் பென்சன் கிடைக்கும்.
*இபிஎப்ஓ விதிமுறைப்படி ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவரின் கணவன் அல்லது மனைவிக்கு பென்சன் தொகையில் 75% ஓய்வூதியமாக கிடைக்கும்.
*குறைந்தபட்சம் ₹750 வழங்கப்படும்.
*தாய், தந்தை இருவரும் இல்லாத பிள்ளைகளுக்கு 25 வயதுவரை பென்சன் வழங்கப்படும்.
*தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் பென்சன் வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தினர் குறிப்பிட்ட சில ஆவணங்களுடன் கடிதம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க பட வேண்டிய ஆவணங்கள்:
*ஓய்வூதியதாரரின் இறப்புச் சான்றிதழ்
*குடும்பத்தினரின் ஆதார் கார்டு நகல்
*பயனாளியின் வங்கிக் கணக்கு எண்
*பயனாளியின் வங்கி பாஸ்புக் அல்லது ரத்தான காசோலை
*பயனாளிகள் 18வயதிற்கு கீழானவர்களாக இருந்தால் வயதுச் சான்றிதழ்